ஷா ஆலம், டிச 12: பேங்காக், சுபாசலசாய் தேசிய மைதானத்தில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தேசிய வீராங்கனை கிரேஸ் வோங் தங்கப் பதக்கம் வென்றார்.
இப்போட்டியில் சீ விளையாட்டு சாதனையையும் தேசிய சாதனையையும் முறியடித்து கிரேஸ் தங்கப் பதக்கத்தை வென்றார். அவர் தனது நான்காவது முயற்சியில் 65.41 மீட்டர் தூரத்தில் குண்டை எறிந்ததாக ஸ்டேடியம் ஆஸ்ட்ரோ தெரிவித்துள்ளது.
இந்த சாதனை கடந்த ஆகஸ்ட் மாதம் கங்காரில் உள்ள துவாங்கு சையட் புத்ரா மைதானத்தில் நடந்த போட்டியில் அவர் படைத்த 63.53 மீட்டர் தேசிய சாதனையை முறியடித்தது.
மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கம்போடிய பதிப்பில் அடைந்த 61.87 மீட்டர் விளையாட்டு சாதனையையும் கிரேஸ் முறியடித்தார்.
இது சீ விளையாட்டுப் போட்டியில் கிரேஸின் நான்காவது தங்கப் பதக்கமாகும், அதாவது 2017, 2021 மற்றும் 2023 பதிப்புகளிலும் அவர் தங்கம் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


