கோலாலம்பூர், டிச 12: நேற்று செராஸ், புக்கிட் ஜலீலில் குப்பை லாரியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் உடலில் பலத்த காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
சுமார் 25 வார வயதுடைய மற்றும் 35 சென்டிமீட்டர் நீளம் கொண்ட அந்த ஆண் கருவுக்கு, மண்டை ஓடு உடைந்து, தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வயிற்றில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக செராஸ் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ஐடில் போல்ஹாசன் தெரிவித்தார்.
"இதுவரை, விசாரணைக்கு உதவ நான்கு நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக" அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று, சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் மதியம் 12.30 மணி அளவில் லாரியிலிருந்து குப்பைகளை இறக்கும் போது இந்த சிசுவைக் கண்டதாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
தண்டனைச் சட்டப் பிரிவு 315 இன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நடவடிக்கை குழந்தை உயிருடன் பிறப்பதைத் தடுப்பது அல்லது பிறந்த பிறகு அதை இறக்கச் செய்வது போன்ற குற்றங்களில் கீழ் இடம்பெறும்


