கோலாலம்பூர், டிச 12 - நாட்டில் அதிகரித்து வரும் ``silent call`` புதிய வகை தொலைபேசி மோசடியை பற்றி காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மோசடி முறையில் தெரியாத எண்ணிலிருந்து வரும் அழைப்பில் யாரும் பேசாமல் இருப்பார்கள். நீங்கள் 'ஹலோ" என ஒரு வார்த்தை சொன்னாலே, உங்கள் குரல் AI மூலம் பதிவுச் செய்யப்பட்டு நகலாக உருவாக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அந்த குரலை பயன்படுத்தி குடும்பத்தினரிடம் பணம் கேட்க, வங்கிகளை ஏமாற்ற போன்ற நடவடிக்கைக்கு இந்த மோசடி கும்பல்கள் பயன்படுத்துவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனவே, முன்பின் தெரியாத எண்களிலிருந்து வரும் silent call அழைப்புகளை உடனே துண்டிக்கவும் மற்றும் "ஹலோ" கூட சொல்ல வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.
மேலும், சந்தேகத்திற்கிடமான எண்களையும் உடனே ``block`` செய்து விடுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த மோசடி Al voice cloning தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் மிகவும் ஆபத்தான புதிய முறை என்று காவல்துறை அறிவித்தது.


