தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான மோதலை நிறுத்த அதிபர் டிரம்ப் முயற்சி

10 டிசம்பர் 2025, 10:19 AM
தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான மோதலை நிறுத்த அதிபர் டிரம்ப் முயற்சி

பேங்காக், டிச 10 - தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான மோதல் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது. இந்த சண்டையை நிறுத்த தொலைப்பேசி அழைப்பின் மூலம் கேட்டு கொள்ளப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் அந்த இரு நாடுகளின் அண்டை நாடுகளுக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு டிரம்ப் போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் அன்று அளித்த நேர்காணலில், எல்லை மோதலில் பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார். அதுமட்டுமில்லாமல், தற்போது உள்ள நிலைமை மூன்றாம் தரப்பு சமரசத்திற்காக உகந்ததாக இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் கம்போடிய பிரதமரின் உயர் ஆலோசகர் தனது நாடு எந்த நேரத்திலும் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே தாய்லாந்துடனான எல்லை மோதல் தீவிரமடைந்து, சர்ச்சைக்குரிய எல்லையின் இருபுறமும் பொதுமக்கள் பெருமளவில் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த மோதலால் கம்போடியா முழுமையாக சீ விளையாட்டு போட்டியிலிருந்து விலகிவிட்டதாக அந்நாட்டின் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.