கோலாலம்பூர், டிசம்பர் 10- மேம்படுத்தப்பட்ட புதிய அடையாள அட்டைகளைப் பெற மலேசியர்கள் அவசரப்பட வேண்டாம் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த செயல்முறை அமைப்பு முழுமையாகத் தயாரான பின்னரே அது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ள முதல் கட்ட நடவடிக்கைகளானது, அடையாள அட்டையின் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய அடையாள அட்டையானது, படிப்படியாக நான்கு கட்டங்களாகச் செயல்படுத்தப்படவுள்ளது.
அதன் பின்னர், இரண்டாம் கட்டத்தில், இந்தப் புதிய அடையாள அட்டைக்கு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் கட்டமானது நாடு தழுவிய நிலையில், முகவர்கள் மற்றும் சேவை அமைப்புகள் மூலம் QR அடிப்படையிலான சரிபார்ப்பு முறைகளின் படி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


