தமிழ்ப்பள்ளிகளுக்கு திறன் பலகை வழங்கும் புதிய திட்டம் - மித்ரா

10 டிசம்பர் 2025, 3:23 AM
தமிழ்ப்பள்ளிகளுக்கு திறன் பலகை வழங்கும் புதிய திட்டம் - மித்ரா

கோலாலம்பூர், டிச 10 - மித்ரா மூலம் தமிழ்ப்பள்ளிகளுக்கு திறன் பலகை (SMART BOARD) வழங்கும் புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாகக் கோலாலம்பூரைச் சேர்ந்த 15 மற்றும் சிலாங்கூரில் உள்ள 10 தமிழ்ப்பள்ளிகளுக்கு திறன் பலகைகள் வழங்கப்பட்டன. இந்த திறன் பலகை நிச்சயம் தமிழ்ப்பள்ளிகளுக்கு பெரும் பயனாக இருக்கும் என டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில், நடைபெற்ற இந்த திறன் பலகை அறிமுக விழாவில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், கல்வி துணை அமைச்சர் வொங் கா வொ மற்றும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மொத்தம் 387 தமிழ்ப்பள்ளிகளுக்கு 400 திறன் பலகைகள் கொடுக்கப்படவுள்ளது. உதாரணத்திற்கு, 800 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளுக்கு இரு திறன் பலகைகள் 800 மாணவர்களுக்கு கீழ் பயிலும் பள்ளிகளுக்கு ஒரு திறன் பலகையும் கொடுப்போம் என்று டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

இன்றைய நவீன காலத்தில் இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயன்பாடும் தேவையும் பள்ளிகளில் அத்தியாவசியமாகிவிட்டது. அதில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பின்தங்கி விடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிக்குள் நாடளவில் அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் இந்த திறன் பலகை கொண்டு சேர்த்து முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.