கோலாலம்பூர், டிச 9 - எதிர்வரும் டிசம்பர் 12ஆம் தேதி ஜோகூர் பாரு சென்ட்ரலுக்கான ETS ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு 30 விழுக்காடு சிறப்பு கட்டணக் கழிவை ``Keretapai Tanah Melayu Berhad`` வழங்குகிறது.
டிசம்பர் 12 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி ஜனவரி 11ஆம் தேதி வரை KL Sentral-JB Sentral-KL Sentral பயணச் சேவைக்கு தள்ளுபடி வழங்கப்படும் என KTM Berhad வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 5,000 நபர்களுக்கு இந்த தள்ளுப்படி வழங்கப்படும். பயணிகள் டிக்கெட்டுகளை வாங்கும் போது JBBEST என்ற விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தி இந்த சலுகையை அனுபவிக்கலாம்.
டிக்கெட்டுகளை KITS ஸ்டைல் செயலி, KTMB வலைத்தளம் அல்லது KTMB கியோஸ்க் மூலம் வாங்கலாம்.
பள்ளி விடுமுறை காலம் மற்றும் ஆண்டின் இறுதிக்கு முன்னதாக இச்சேவை சரியான நேரத்தில் தொடங்கப்படுகிறது என கருதப்படுகிறது.


