கோலாலம்பூர், டிச 9- இணைய விளையாட்டில் சிறார்களின் பாதுகாப்பு குறித்து துல்லியமாக ஆராயப்படும் என்று தொடர்பு அமைச்சின் துணையமைச்சர் தியோ நீ செங் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து உரிய தரப்பிடம் தகுந்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என்றும் துணையமைச்சர் சொன்னார்.
சிறார்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது.
சிறார்கள் இணைய பயன்பாடு குறித்து பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் சிறார்களை உட்படுத்திய குற்றங்களைக் குறைக்க முடியும் என்று அவர் மேலவையில் தெரிவித்தார்.
முன்னதாக, பெடொஃபிலியா நடவடிக்கையை முடக்குவது குறித்து துணையமைச்சர் தியோ நீ செங்கிடம் செனட்டர் நோர்ஹஸ்மி எழுப்பியக் கேள்விக்கு அவர் அவ்வாறுபதிலளித்தார்.


