கோலாலம்பூர், டிச 9- கினாபாத்தாங்கான் நாடாளுமன்றம், லமாக் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து மலேசிய தேர்தல் ஆணையம் எதிர்வரும் டிசம்பர் 16ஆம் தேதி சிறப்பு கூட்டத்தை நடத்தும் என்று அறிவித்துள்ளது.
மக்களவை சபாநாயகர் டான்ஶ்ரீ ஜொஹாரி அப்துல், சபா மாநில சபாநாயகர் டத்தோஶ்ரீ கட்சிம் யஹ்யா அவர்களிடமிருந்து தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது.
சபா மாநில முன்னாள் தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ புங் மொக்தார் ரடின் காலமானதைத் தொடர்ந்து இந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளும் காலியானது.
60 நாட்களுக்குள் சபா மாநிலத்தில் உள்ள இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூட்டரசு அரசியலமைப்பு சட்டம் 54ஆவது பிரிவும் சபா மாநில அரசியலமைப்பு சட்டம் 21ஆவது பிரிவும் எடுத்துரைக்கிறது.




