தாப்பா, 9 டிசம்பர்: தைப்பிங் விமான நிலையத்திற்கு அருகே, சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் மலேசிய விமான விளையாட்டு கூட்டமைப்பின் (MSAF) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஈடுபட்ட விமானியும் பயிற்சியாளரும் விமான விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று பேராக் தலைமை காவல்துறை அதிகாரி டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் கூறினார். இந்த சம்பவம் மலேசிய சிவிலியன் விமான அதிகாரிகளுக்கு (CAAM) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தைப் பற்றிய மேலதிக விசாரணை CAAM மூலம் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு NG MERS 999 அமைப்பின் மூலம் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது என்று தைப்பிங் மாவட்ட காவல் தலைவர் ACP முகமது நாசிர் இஸ்மாயில் கூறினார். 46 வயது விமானியும் 40 வயது பயிற்சியாளரும் தைப்பிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும், விமானம் என்ஜின் குறைபாடு காரணமாக அவசர தரையிறக்க நடவடிக்கை எடுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.


