கோல சிலாங்கூர், , டிசம்பர் 9 — இளைஞர்களின் தொழில்முனைவு திறனை மேம்படுத்தும் நோக்கில் சிலாங்கூர் கேரியர் லாஞ்ச்பேட் 2025 எனும் தொழில்முனைவு கருத்தரங்கு STDC கோல சிலாங்கூரில் நடைபெற்றது. சிலாங்கூர் மாநில மனிதவளம், மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் தலைமையில் நடந்த இந்நிகழ்வு, வேலை சந்தை புரிதல், தற்குறிப்பு தயாரித்தல், வேலைப் பொருத்தம் மற்றும் தொழில் வழிகாட்டல் போன்ற முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டது.
பங்கேற்ற மாணவர்கள், நிகழ்வு வழங்கிய பயிற்சி மற்றும் தகவல்கள் அவர்களின் தொழில்முனைவு தன்னம்பிக்கையை அதிகரித்ததாகத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட சமையல் துறை மாணவர் சர்வீன் சுதேஷ்குமார்
“இந்தக் கல்லூரியில் படிப்பதில் எனக்கு பெருமை. மேலும் எங்களுக்காக இந்த தொழில்முனைவு நிகழ்வை நடத்தி, வேலைக்குத் தேவையான தற்குறிப்பு எப்படி எளிதாக தயார் செய்வது என்பதை கற்றுக் கொடுத்ததற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த கருத்தரங்கு எங்களுக்குச் சிறந்த உதவியாக இருக்கும்,” என்றார்.
இதனைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் மின்னணு மாணவரான முகமது இர்பான் பின் முகமது நாசிர் “முன்பு நான் மின்சாரத் துறையில் வேலை செய்திருக்கிறேன். ஆனால் அந்த நேரத்தில் மென்திறன்கள் குறைவாக இருந்தது.

இந்தப் பயிற்சி என்னுடைய மென்திறன்களை மேம்படுத்தியுள்ளது என்று கூறினார். இதன் மூலம் படிப்பை முடித்த பின் மின்சாரம் மற்றும் மின்னணு துறையில் வேலை பெறுவது மேலும் எளிதாகும் என்று நம்புவதாக அவர் பகிர்ந்தார்.
“Selangor Career Launchpad – 2025” திட்டம் பட்டதாரிகள், வேலை தேடுபவர்கள் மற்றும் தொழில் முன்னேற்றத்தை நாடுபவர்கள் ஆகியோருக்கான உதவி மேடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான பயிற்சியைத் தாண்டி, சந்தை பகுப்பாய்வு, தொழில் ஆலோசனை மற்றும் சரியான வேலை பொருத்தம் ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கிறது.
நூர் அலேஸ்யா இஸ்ஸாத்தி பிண்டி முகமது சாம்சுடின் பொது நிர்வாக மாணவி“எனக்கு இதற்கு முன் வேலை செய்த அனுபவம் இல்லை. வேலை பெறுவது கடினம் என்று பலர் சொல்வதை கேள்விப்பட்டுள்ளேன். தவறான தற்குறிப்பு, தவறானவேலைப் பொறுப்புகள் விண்ணப்பம் போன்றவற்றால் இந்த சூழ்நிலை ஏற்படுவதாக அவர் கூரினார். இந்த நிகழ்வின் மூலம் சரியான வாழ்க்கை விவரம் எழுதுவது, சரியான பணிச்சுமையைத் தேர்ந்தெடுப்பது, வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை ஆகியவற்றை தெளிவாகக் கற்றுக்கொண்டேன். இது என் எதிர்காலத்திற்கு பெரும் ஆதாரமாக இருக்கும்,” என்று கூறினார்.
சிலாங்கூர் அரசின் மனித மூலதன முன்னேற்ற நோக்கத்தின்கீழ் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சி, மாணவர்கள் மற்றும் வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலை சந்தை போட்டி அதிகரித்து வரும் இந்நேரத்தில், வாழ்க்கை விவரத் தயாரிப்பு, தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைப் பொருத்தம் போன்ற திறன்களை வழங்கும் இதுபோன்ற பயிற்சிகள், அவர்களின் தொழில்முனைவு பயணத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



