கோலாலம்பூர், டிச 9: தாய்லாந்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய சீ விளையாட்டுப் போட்டி 2025இல் பங்கேற்கும் மலேசிய அணிக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“கவனம், அமைதி மற்றும் நம்பிக்கையுடன் விளையாடுங்கள். அனைத்து மலேசியர்களின் பிரார்த்தனைகளும் உங்களளுக்கு துணையாக இருக்கும்” என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
SEA விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் டிசம்பர் 20 வரை நடைபெறும், அதே நேரத்தில் Asean Para Games 2025 (APG) ஜனவரி 20 முதல் 26 வரை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
SEA விளையாட்டுப் போட்டிக்கு மலேசியா 515 அதிகாரிகளுடன் 1,142 விளையாட்டு வீரர்களை அனுப்பியுள்ளது. அதே நேரத்தில் 2025 APG விளையாட்டு போட்டிக்கு 236 விளையாட்டு வீரர்கள் மற்றும் 117 அதிகாரிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாரம் முதல் பல விளையாட்டு நிகழ்வுகள் தொடங்கியுள்ள நிலையில், 200 பதக்கங்களைப் பெற வேண்டும் என்ற இலக்கை நாடு நிர்ணயித்துள்ளது.


