ஜாசின், டிச 9 - வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 183.2இல் லாரி மற்றும் பேருந்து மோதிக் கொண்டதில் 10 பயணிகள் உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர்கள் இருவரும் காயமடைந்தனர்.
ஜோகூர், காம்பீரிலிருந்து அலோர் காஜாவுக்கு கால்நடைத் தீவனங்களை ஏற்றிச் சென்ற லாரி, ஜோகூர், லார்கினிலிருந்து சிரம்பான் நோக்கி சென்ற பேருந்து பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
அதில் 69 வயது லாரி ஓட்டுநருக்கு தலையிலும் கையிலும் காயம் ஏற்பட்ட நிலையில் 44 வயதான பேருந்து ஓட்டுநருக்கு இரு கால்களிலும் வலி ஏற்பட்டு மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர், 10 பயணிகளும் மாற்று பேருந்தில் பயணத்தைத் தொடர்ந்ததாக ஜாசின் காவல்துறை கூறியது.


