வோல்வெர்ஹம்டன், டிச 9- இங்கிலாந்து பிரிமியர் லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணி வோல்வ்ஸ் அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இதில் மென்செஸ்டர் யுனைடெட் மூன்று புள்ளிகளைப் பெற்றது.
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக அவ்வணியின் தாக்குதல் ஆட்டக்காரர் புருனோ ஃபெர்னான்டெஸ், பியூமோ ஆகியோர் கோல்களைப் புகுத்தி வெற்றியை உறுதி செய்தனர்.
கடந்த ஆறு ஆட்டங்களில் மென்செஸ்டர் யுனைடெட் அணி பதிவு செய்த இரண்டாவது வெற்றி இதுவாகும்.
நிர்வாகி ரூபன் அமோரிம் தலைமையிலான மென்செஸ்டர் யுனைடெட் அணி, இங்கிலாந்து பிரிமியர் லீக் போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது


