ஷா ஆலம், டிச 9: MPV வாகனம் மூவார் ஆற்றில் விழுந்து மூழ்கியதன் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
வாகனம் விழுந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் MPV நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதில், 20 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவத்திற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர் அந்த இடத்திற்கு ஓய்வெடுக்க வந்ததாக ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.
தனது தரப்பினருக்கு பிற்பகல் 3.48 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தங்காக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டுத் தலைவர் ஜஹைரி ஷுகோர் கூறினார். பின்னர், முவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த 10 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
"சம்பவ இடத்தில் MPVஇல் சிக்கிய ஒரு பெண்ணைக் கண்டோம். மீட்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவரை வெற்றிகரமாக வெளியேற்றினோம். ஆனால், அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
"உடல் மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.


