பெட்டாலிங் ஜெயா, டிச 9 - போலீஸ் புகார் மேற்கொள்ள வரும்போது பொதுமக்கள் ஆடை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மலாக்கா மாநில போலீஸ் தலைவர் சுல்ஹைரி முக்தார் இந்த அறிவுறுத்தலை முன்வைத்தார்.
பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கடப்பாட்டினை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை அவசியம் என்று அவர் அறிவுறுத்தினார்.
இருப்பினும், ஆபத்து அவசர வேளையின் போது பொதுமக்களுக்கு இந்த ஆடை நிபந்தனைக்கு தளர்வு விதிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
முன்னதாக, சாலை விபத்து குறித்து இரு பெண்கள் புகார் அளிக்க வந்த நிலையில் அவர்களின் ஆடை குறித்து அவர் கருத்துரைத்தார்.
பிறகு, அவர்கள் அணிந்திருந்த ஆடையை மாற்றிவிட்டு வந்து புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.


