தோக்கியோ, டிச 9- ஜப்பான் நாட்டின் வட பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவு செய்யப்பட்டதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 70 சென்டிமீட்டர் உயரத்திற்கு சுனாமி வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
நிலநடுக்கம் காரணமாக வடக்கு ஹொக்காய்டோ பகுதியில் ஒருவர் காயமடைந்த வேளையில் சிலர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று பேரிடர், தீயணைப்பு மீட்பு நிர்வாக தரப்பு தெரிவித்தது.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பான காணொலிகள் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த எச்சரிக்கை சமிக்ஞை திரும்பப் பெற்றுக்கொள்ளபட்டது.


