ஷா ஆலம், டிச 9: கோல சிலாங்கூர் சுற்றுவட்டாரத்திலுள்ள 13 பள்ளிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு கல்வி மாணவர்கள், கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற்ற 2025 மடாணி மாற்றுத்திறனாளி விளையாட்டு நிகழ்வில் பங்கேற்றனர்.
கோல சிலாங்கூர் விளையாட்டு வளாகத்தின் உட்புற மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்தல், உடல் தகுதியை மேம்படுத்துதல் மற்றும் சிறப்பு தேவையுள்ள மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த வாய்ப்பு அளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
கோல சிலாங்கூர் மாவட்ட அலுவலகத்துடன் இணைந்து கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிகேஎஸ்) நடத்திய இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியை, அதன் செயலாளர் முகமட் யுஸ்லி அஸ்கண்டார் தொடக்கி வைத்தார்.
"மலேசியா மடாணியின் சிறப்பை நிலைநிறுத்த எம்பிகேஎஸ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமூகத்தை வலுப்படுத்தி, முன்னேற்றத்திலும் பங்கேற்பிலும் யாரும் புறக்கணிக்கப்படாத வண்ணம் உறுதி செய்கிறோம்," என எம்பிகேஎஸ் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.



