உதவி பணியாளர் கொடுமை: பெண் மற்றும் மகன் கைது

8 டிசம்பர் 2025, 11:34 AM
உதவி பணியாளர் கொடுமை: பெண் மற்றும் மகன் கைது

ஷா ஆலம், டிசம்பர் 8: கோம்பாக்கில் உள்ள ஒரு வீட்டில் பணியாற்றிய உள்ளூர் உதவி பணியாளரை கொடுமை செய்த சந்தேகத்தின் பேரில் ஒரு பெண்ணும், அவரது மகனும் போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

57 மற்றும் 30 வயதுடைய இந்த இரு உள்ளூர் சந்தேக நபர்கள் விசாரணைக்கு உதவுவதற்காக டிசம்பர் 11 வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் நூர் அரிஃபின் முகமது நாசிர் தெரிவித்தார். “22 வயதான பாதிக்கப்பட்ட பெண், கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து சந்தேக நபரின் இல்லத்தில் வேலை செய்து வந்துள்ளார். தற்போது அவர் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

 மருத்துவ பரிசோதனையில் அவரது உடலில் பல பகுதிகளில் காயங்களும், கையில் சூடு காரணமாக காயங்களும் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், வேலை செய்த காலத்தில் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்,” என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். சனிக்கிழமை இரவு 8.38 மணியளவில் பாதிக்கப்பட்டவர் அயல்நாட்டவர் வீட்டிற்குச் சென்று உதவி கோரி தப்பித்த பின் புகார் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த  பொதுமக்கள், விசாரணை அதிகாரி ASP இக்வானிசாம் இஸ்மாயிலை 019-600 0468 என்ற எண்ணில் அல்லது கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகம் 03-6126 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.