உலக மின்னியல் விளையாட்டு போட்டி: மலேசியா வெற்றி

8 டிசம்பர் 2025, 11:33 AM
உலக மின்னியல் விளையாட்டு போட்டி: மலேசியா வெற்றி

கோலாலம்பூர், டிசம்பர் 8:  2025 IESF Mobile Legends: Bang Bang உலக மின்னியல் விளையாட்டு போட்டியில் நடப்பு வெற்றியாளர் பட்டத்தை தற்காத்து, அனைத்துலக ரீதியில் மீண்டும் வரலாறு படைத்துள்ளது மலேசியா.

 Quill City பேரங்காடி நிலையத்தில் ஏற்பட்ட செய்யப்பட்ட இப்போட்டியில் 22 நிமிடங்கள் நீடித்த முதல் சுற்றில் வெற்றி பெறுவதற்கு முன் மலேசியா கடும் சவாலை எதிர் கொண்டது. மேலும் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் கம்போடியாவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து மலேசியா வெற்றி பதக்கத்தை வென்றது.

இரண்டாவது சுற்றில் இட்ரின் ஜமால், முஹமட் கய்யூம் அரிஃபின் முஹமட் சுஹைரி, முஹமட் ஹக்குல்லா அஹ்மாட் ஷாருல் சமான், ஹசிக் டெனிஷ் முஹமட் ரிஸ்வான் மற்றும் எல்தோன் ரெய்னர் ஆகியோர் கொண்ட தேசிய அணி 8 நிமிடங்களில் வெற்றியைப் பதிவு செய்தது. இதில் மூன்றாவது சுற்றை வெறும் 17 நிமிடங்களில் மலேசியா கைப்பற்றியது

2024 ஆம் ஆண்டு சவூதி அரேபியா ரியாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிலிப்பைன்ஸை 2-0 எனத் தோற்கடித்ததற்கு பின்னர், மின்னியல் விளையாட்டில் மலேசியா தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.