பாசோக், டிச 8 — இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள 628 மீனவர்களுக்கு RM1.8 மில்லியனை மலேசிய மீன் மேம்பாட்டு வாரியம் (LKIM) ஒதுக்கீடு செய்துள்ளது. இது மீனவர் நலத்திட்டம் (Skim Bantuan Bencana Alam dan Kebajikan Nelayan) மூலம் வழங்கப்படுகிறது.
இந்த நிதி பெரும்பாலும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரழிவுகளால் சேதமடைந்த வீடுகள் மற்றும் மீன்பிடி படகுகளை பழுது பார்க்க உதவுகிறது என LKIM தலைவர் முகமட் பைஸ் ஃபாஸில் தெரிவித்தார்.
“இந்த ஆண்டில், மொத்த RM2 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பகுதி கிழக்கு கடற்கரை மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒருவருக்கு RM10,000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. சேதம் அதிகமாக இருந்தால் LKIM அரசாங்கத்தின் மற்ற திட்டங்களின் மூலம் கூடுதல் நிதி கோரும்,” என்று அவர் பாசோக்கில் நடைபெற்ற MADANI Anak Nelayan Kembali Ke Sekolah நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இந்த திட்டம் மீனவர்களின் சுமையை குறைத்து, LKIM சமூகத்தின் நலன்களை பாதுகாப்பதற்கும், உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான முயற்சி யை ஆதரிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் மீனவர்களின் 100 பிள்ளைகளுக்கு மொத்தம் RM8,600 மதிப்புள்ள பள்ளிப் பொருட்கள் பைஸ் ஃபாஸில் வழங்கினார். இதில் பள்ளிப்பைகள், தொப்பிகள், நீர்பாட்டில்கள் மற்றும் ஒவ்வொருவருக்கும் RM50 மதிப்புள்ள பற்றுச்சீட்டு அட்டைகள் இருந்தன


