ஆஸ்திரேலியா, டிச 8 - ஆஸ்திரேலியா உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் கடுமையான காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சேதமான வீடுகளின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் சென்ட்ரல் கோஸ்ட்டில் 16 வீடுகளும், மிட் நோர்ட் கோஸ்ட்டில் நான்கு வீடுகளும் அடங்கும்.
நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் உள்ள ஆறு பகுதிகளில் இயற்கை பேரிடர் (Natural Disasters) அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் கோஸ்ட், மிட் கோஸ்ட், அப்பர் ஹண்டர், முஸ்வெல்வ்ருக், வார்ரம்பங்கிள் மற்றும் டுபோ பகுதிகளில் உள்ள மக்கள் உடனடி நிதி உதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த நிதி உதவி, பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர தங்குமிடம் மற்றும் தேவையான பொருட்களைப் பெற உதவும். அதோடு, சிறு வியாபாரிகள் உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதி அளிக்கும் திட்டமும் இதில் அடங்கும்.
பெர்னாமா


