மெட்ரிட், டிச 8- லா லீகா காற்பந்து ஆட்டத்தில் பலம் பொருந்திய ரியால் மெட்ரிட் அணி, செல்டா விகோ அணியுடன் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.
ரியால் மெட்ரிட் அணியில் இரு ஆட்டக்காரர்கள் முரட்டு தனமாக விளையாடியதால் அவர்களுக்கு நடுவர் சிவப்பு அட்டை வழங்கி வெளியேற்றப்பட்டனர்.
இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் ஒன்பது வீரர்களுடன் முடித்தது. இது செல்டா விகோவுக்கு இந்த சீசனில் 15 லீக் ஆட்டங்களில் கிடைத்த இரண்டாவது வெற்றி ஆகும்.
சான்டியாகோ பெர்னாபு மைதானத்தில் 19 ஆண்டுகளில் செல்டா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியானது, ரியல் மாட்ரிட்டின் இந்த சீசனின் 100% உள்ளூர் லீக் வெற்றி சாதனையை முடிவுக்குக் கொண்டு வந்தது.
இந்தப் போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து செல்டா அணி புள்ளிப்பட்டியலில் 14-வது இடத்திலிருந்து 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


