ஜொகூர் பாரு, டிச 8- கடப்பிதழ் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் எல்லை பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு துறையின் அதிகாரிக்கு எதிராக நான்கு நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி இந்த நடவடிக்கையை ஜொகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்கண்டார் கட்டிடத்தில் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது
MYBORDER PASS முகப்பில் அந்த அதிகாரியைச் சோதனை செய்தபோது இந்த நடவடிக்கை கண்டறியப்பட்டதாக AKPS கமொண்டர் ரொஸித்தா டிம் கூறினார்.
பணியின் போது தொலை தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தியதாகவும் அவர் விதிமுறைகளை மீறியதாகவும் அவர் சொன்னார். மேலும், எட்டு கடப்பிழ்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
1966ஆம் ஆண்டு கடப்பிதழ் சட்டத்ஹின் செக்ஷன் 12(1) எஃப் இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுவதாக அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.


