சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்களுக்கு ‘ஜாசா பக்தி’ அங்கீகாரம் வழங்கி கௌரவிப்பு

8 டிசம்பர் 2025, 8:05 AM
சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்களுக்கு ‘ஜாசா பக்தி’ அங்கீகாரம் வழங்கி கௌரவிப்பு
சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்களுக்கு ‘ஜாசா பக்தி’ அங்கீகாரம் வழங்கி கௌரவிப்பு

ஷா ஆலம், டிச 8 — சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமூக நலனுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 62 இந்திய சமூகத் தலைவர்களுக்கு இன்று “ஜாசா பக்தி அங்கீகாரம் வழங்கப்பட்டு, அவர்களின் உழைப்பும் சேவையும் மாநில அரசால் உயர்ந்த மதிப்புடன் கௌரவிக்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில மனிதவளம், மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் தலைமையில் நடைபெற்ற இந்த விழா, சாதாரண நிகழ்ச்சியாக அல்லாது, சமூகத்திற்காக இரவு பகலாக உழைத்த அடித்தளத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டாக அமைந்தது.

“இந்த 62 தலைவர்கள் தங்கள் பகுதிகளில் இந்திய சமூகத்துக்கும் மாநில அரசுக்கும் இடையே உறுதியான பாலமாக இருந்து, மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைப்பதிலிருந்து தீர்வுகளைப் பெற்றுத் தருவதுவரை பல்வேறு பொறுப்புகளை மனம் திறந்து மேற்கொண்டதாக” அவர் வலியுறுத்தினார்.

அவர்கள் “சமூகத் தலைவர்” என்ற பெயருக்குப் புறம்பாக, மக்கள் நலனுக்காக போராடுபவர்கள், நம்பிக்கையை மீட்டெடுப்பவர்கள், சமூக குரலை உயர்த்துபவர்கள், மேலும் எண்ணமற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார ஒளி வழங்குபவர்கள் என அவர் பாராட்டினார். இரண்டு ஆண்டுகள் தங்களது நேரம், ஆற்றல் மற்றும் அன்பை சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த இவர்களின் சேவை மிக உயர்ந்த மரியாதைக்கு உரியது என்று அவர் தெரிவித்தார்.

அவர்களது காலம் நிறைவடைந்தாலும், அவர்கள் உருவாக்கிய அனுபவம், பழகிய உறவுகள் மற்றும் சமூகத்தில் கட்டிய நம்பிக்கை தொடர்ந்து மக்களுக்குப் பயன் அளிக்கும் என்பதில் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இந்திய சமூக முன்னேற்றத்திற்காகவும், ஒற்றுமை உருவாக்கவும், சமூகத்தை முன்னோக்கி நடத்தவும் அவர்கள் தொடர்ந்தும் பங்களிக்க வேண்டும் எனவும் அவர் ஆவலுடன் தெரிவித்தார்.

விழாவின் நிறைவாக, சமூக முன்னேற்றத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட 62 இந்திய சமூகத் தலைவர்களுக்கு “ஜாசா பக்தி அங்கீகாரம்” வழங்கப்பட்டு, அவர்கள் ஆற்றிய சேவை பெருமையுடன் நினைவுகூரப்பட்டது.

இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார். பின்னர், திரு. வீ.பாப்பா ராய்டு அவர்கள் சிலாங்கூர் மாநில இந்திய சமூகத் தலைவர்களின் ஜாசா பக்தி அங்கீகாரம் விழா 2024–2025 ஐ அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.