வாஷிங்டன், டிச 8- அனைத்துலக காற்பந்து சம்மேளனமான FIFA நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் உலக கிண்ண காற்பந்து போட்டி அடுத்தாண்டு மெக்சிகோ, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், உலக கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி டிரா அண்மையில் நடைபெற்றது. அதில் உபசரணை அணியான மெக்சிகோ, 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ண உபசரணை நாடான தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.
இதுவே உலக கிண்ண போட்டியின் தொடக்க ஆட்டமாகும். 2022ஆம் ஆண்டு உலக கிண்ண வெற்றியாளரான அர்ஜெண்டினா அணி ஜெ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
ஜூன் 11, 2026ஆம் ஆண்டு தொடங்கும் உலக கிண்ணம் காற்பந்து போட்டி ஜூலை 19ஆம் தேதி நிறைவு பெறும். உலகக் கிண்ண போட்டியின் இறுதியாட்டம் நியூ ஜெர்சியில் உள்ள மெட் லைஃப் அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த முறை 48 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில் இறுதிகட்ட பணிகளில் அனைத்து அணிகளும் ஈடுபட்டு வருகின்றன.


