ஜோர்ஜ்டவுன், டிச 8 : சென்னைக்கும் பினாங்கு மாநிலத்திற்கும் இடையேயான IndiGo எயர்லைன்ஸ் நிறுவனத்தின் நேரடி விமான சேவை, அதன் செயல்பாட்டு சிக்கல்களால் பாதிக்கப்படவில்லை.
சென்னையிலிருந்து புறப்பட்ட 6E1045 விமானம் இன்று காலை 8:09 மணிக்கு பினாங்கு சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது என பினாங்கு சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரக் குழு தலைவர் வாங் ஹோன் வாய் தெரிவித்தார்.
இந்தியாவில் அந்த நிறுவனம் எதிர்கொள்ளும் சிக்கல், புதிய Flight Duty Time Limitations (FDTL) விதிகளால் ஏற்பட்டது. புதிய விதிகள் ஓய்வு நேரத்தை கட்டாயப்படுத்துவதால், விமானிகள் மற்றும் குழு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
புதிய FDTL விதிகளின் அடிப்படையில் விமானி தேவையை தவறாக கணித்ததாக IndiGo ஒப்புக்கொண்டது.
இந்திய அரசு, இப்பிரச்சனையை விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த செயல்பாட்டு தோல்விக்கான பொறுப்பை தீர்மானிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
IndiGo நிறுவனம் சென்னையிலிருந்து பினாங்கு மாநிலத்திற்கான நேரடி சேவையை டிசம்பர் 21, 2024 அன்று தொடங்கியது.
பினாங்கு சர்வதேச விமான நிலையம் கடந்த ஆண்டில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 51.43% வளர்ச்சியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
– பெர்னாமா


