ஷா ஆலம், டிச 8 — ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) பகுதியில் உள்ள கார் பட்டறை, கார் சாதன விற்பனை கடைகள், கார் கழுவும் மையங்கள் மற்றும் டயர் கடைகள் ஆகியவை பொது கார் நிறுத்துமிடங்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் அதிகபட்சமாக RM1,000 அபராதத்தை சந்திக்க நேரிடும்.
இந்த வளாகங்கள் தங்கள் கடை முன் உள்ள இரண்டு கார் நிறுத்துமிடங்களை வாடகைக்கு எடுத்திருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக எம்பிஎஸ்ஏ மேம்பாட்டு துணை செயலாளர் அனிசா ஓஸ்மான் கூறினார்.
எம்பிஎஸ்ஏ நிர்வாகத்தின் கீழ் 431 கார் பட்டறை, கார் சாதன விற்பனை கடைகள், கார் கழுவும் மையங்கள் மற்றும் டயர் கடைகள் உள்ளன.
“பொது கார் நிறுத்துமிடங்களைப் பழுது பார்க்கும் வேலைக்கு அல்லது பொருட்களைக் காட்சிப்படுத்தும் நடவடிக்கைக்காகப் பயன்படுத்தும் நிறுவனங்கள், பிற சாலையோரப் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
முன்னதாக, அனிசா எம்பிஎஸ்ஏ மாநாட்டு மையத்தில், பிரிவு 13 இல் நடைபெற்ற கார் சம்பந்தப்பட்ட வணிகம் தொடர்பான வழிகாட்டி குறித்து பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
100க்கும் மேற்பட்ட வணிக உரிமையாளர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
“நாங்கள் அவர்களுக்கு விதிகளைப் பற்றி அறிவித்தோம். ஏனென்றால், அவர்கள் பயணிகளுக்கு சிரமத்தை உருவாக்காமல் இருக்க வேண்டும்,” என்றார் அனிசா.
பொதுமக்கள் கார் நிறுத்தும் இடம் பெறுவதில் குறிப்பாக வர்த்தக மையங்களில். கடுமையான சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
“இந்த புதிய நடவடிக்கை வணிகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த அல்ல, போக்குவரத்து பிரச்சனையை தீர்ப்பதற்கு ஆகும்,” என்று அவர் கூறினார்.


