ஷா ஆலம், டிச 8: வணிகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறனை மேம்படுத்தும் நோக்கில் சுங்கை பிலேக் மற்றும் சிப்பாங் மாவட்டங்களில் உள்ள வணிகர்கள், 2025 டிஜிட்டல் மேம்பாடு திட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிப்பாங் மாநகராட்சியின் (MPSepang) தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஏற்பாடு செய்த இத்திட்டம், வணிகர்களுக்கு ஊராட்சி மன்றம் (PBT) வழங்கும் டிஜிட்டல் வசதிகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. இதில் உரிமம் பெற்றல், வங்கி சேவைகள் போன்ற அம்சங்களும் அடங்கும்.
ஆம்பாங்க் (Ambank) பிரதிநிதி, உரிமம் வழங்கும் துறை மற்றும் சிப்பாங் நகராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆகியவை இத்திட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தும் வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனை முறைகளைப் பற்றி பகிர்ந்தனர்.
வாடிக்கையாளர்களிடம் இணைய மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகள் மேம்பட்டுள்ளதால், டிஜிட்டலாக்கம் தற்போது அவசியமாகிவிட்டது என சிப்பாங் நகராட்சி தெரிவித்தது.
சிப்பாங் மாவட்ட வணிகர்கள் பின்தங்காமல் நவீன வணிக சூழலில் தங்களை தயார்ப்படுத்தி கொள்ள வலுவான முன்முயற்சிகளை நகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.


