கோலாலம்பூர், டிச 8- நம்பிக்கை ஊடக குழுமத்தின் நட்சத்திர வர்த்தக விருது விழா கோலாலம்பூரில் உள்ள மெனாரா பேங்க் ரக்யாட்டில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த நிகழ்ச்சியில் நம்பிக்கையின் வாழ்நாள் சாதனையாளர் மலேசிய மாமனிதர் துன் சாமிவேலு விருது டான்ஸ்ரீ மாரிமுத்துவிற்கு வழங்கப்பட்டது.
சிறந்த அரசு சேவையாளர் விருது போக்குவரத்து அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜனசந்திரனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த முன்னோடி தமிழ்ப்பள்ளிக்கான விருது ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.
சிறந்த கல்வியாளருக்கான விருது டாக்டர் மனோன்மணி தேவிக்கு வழங்கப்பட்டது. சிறந்த மருத்துவருக்கான விருது டாகடர் நவின் தியாகராஜாவுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த எழுத்தாளருக்கான விருது பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த செய்தி ஆசிரியருக்கான விருதை குணாளன் மணியம், சிறந்த நிருபருக்கான விருது பிரேம் ஆனந்த், சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது சுந்தர் ஆகியோர் வென்றனர்.


