தைப்பிங், டிச 8: பேரா அவுலோங் ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. சுமார் 8 லட்சம் ரிங்கிட் செலவில் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேகத்தைக காண நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.
கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இநத ஆலய வளர்ச்சிக்கு மாநில அரசு நிதி உதவியுடன் பொதுமக்களும் நன்கொடைகள் வழங்கியுள்ளதாக ஆலயத் தலைவர் ஜி. சுரேந்திரன் ஆழ்வார் கூறினார்.
இந்த ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகம் கடந்த 2013 ஆண்டு நடைபெற்றது . இன்று நடைபெற்றது இரண்டாவது கும்பாபிஷேகம்.
இந்த கும்பாபிஷேக விழா சிவஸ்ரீ ஞான சிலன் சிவாச்சாரியரர் தலைமையில் நடந்தது.
காலை மணி 10. 30 மணியளவில் யாகசாலையில் சிறப்பு வழிபாட்டு ஆராதனைக்குப் பின்னர் கும்ப பறப்பாடு நடைபெற்று ஆலயம் வலம் வந்து ஓம் நமச்சிவாய என்ற முழகத்துடன் ஆலய கலசங்களுக்கு புணித நீ்ர் ஊற்றப்பட்டது.
அவுலோங்கில் வசித்து வந்த இந்துக்கள் தங்களின் வழிபாட்டிற்கு இந்த ஆலயத்தை உருவாக்கியதாக ஆலயத் தலைவர் ஜி. சுரேந்திரன் ஆழ்வார் கூறினார்.
இந்த ஆலயம் படிபடியாக நிர்மாணிக்கப்ட்டு் இன்று அற்புதமான முறையில் காட்சியளிக்கிறது.
இந்த கும்பாபிஷேக விழா முன்னிட்டுட்டு நேற்று முதல் நாள் இரவு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலத்துக்கொள்ள மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் வருகை அளித்தார்.


