உலு லங்கட், டிசம்பர் 7 - சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட உலு லங்கட்டின் டூசுன் நண்டிங்கில் உள்ள 54 வீட்டுத் தலைவர்களுக்கு சிலாங்கூர் இஸ்லாமிய மத கவுன்சில் (மைஸ்) ஆரம்ப உதவிகளை வழங்கியுள்ளது.அதன் தலைவர் டத்தோ செத்தியா சலாஹுதீன் சைடீன் கூறுகையில், இப்போது தங்கள் வீடுகளை மீட்டெடுக்கும் குடியிருப்பாளர்க-ளுக்காக RM31,878 உதவி சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் மூலம் விரைவாக திரட்டப்பட்டது.
"இந்த வெள்ளப் பேரழிவை எதிர்கொள்பவர்களின் சுமையை குறைக்க உதவும் வகையில் சில உதவிகளை வழங்க நாங்கள் இன்று வந்துள்ளோம்" என்று எஸ். ஆர். ஏ டூசுன் நண்டிஙகில் இன்று நடைபெற்ற உதவி வழங்கல் விழாவுக்குப் பிறகு அவர் கூறினார்.
டெராஜு எகோனோமி அஸ்னாஃப் (டெராஸ்) மற்றும் மைஸின் சமூகத் துறை மூலம் அனுப்பப்பட்ட நன்கொடை-களில், தலா RM200 க்கும் அதிகமான மதிப்புள்ள உணவு பெட்டிகள், அரிசி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் அன்றாட பயன் பாட்டிற்கான துணி, பிரார்த்தனை பாய்கள் மற்றும் சோப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அடங்கும். பாதிக்கப் பட்டவர்களுக்கு யயாசன் இஸ்லாம் மந்திரி புசார் டாருல் எஷானிடமிருந்து தலா RM100 வழங்கப்பட்டது.
அனைத்து உதவிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான அடிப்படை தேவைகள் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் சுத்தம் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன என்று சலேஹுதீன் மேலும் கூறினார்.
"இந்த பங்களிப்பு நிச்சயமாக அவர்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது, ஆனால் குறைந்தபட்சம் இந்த கடினமான காலகட்டத்தில் அவர்களுக்கு உதவும்" என்று அவர் கூறினார்.




