பூச்சோங், டிசம்பர் 6 — சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் (லுவாஸ்) தற்போது தாமான் பெரிண்டஸ்திரியன் பூச்சோங் பகுதியைச் சுற்றியுள்ள பல கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை (LRK) மாசுபடுத்திய சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றத்தை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இணைந்துள்ளது.
தேசிய நீர்சேவைகள் ஆணையம் (SPAN) தலைமையிலான இந்த நடவடிக்கையில் லுவாஸ்சுடன் இணைந்து பூச்சோங் கழிவு நீர் மாசு தடுப்பு ஒருங்கிணைந்த நடவடிக்கையில் பங்கேற்கிறது
சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் (லுவாஸ்) தற்போது தாமான் பெரிண்டஸ்திரியன் பூச்சோங் பகுதியைச் சுற்றியுள்ள பல கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை (LRK) மாசுபடுத்திய சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றத்தை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இணைந்துள்ளது.
தேசிய நீர்சேவைகள் ஆணையம் (SPAN) தலைமையிலான இந்த நடவடிக்கையில் இண்டா வாட்டர் கோன்சோர்ட்டியம் (IWK), சுற்றுச்சூழல் துறை (DOE), மலேசிய காவல்துறை (PDRM), மற்றும் சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் (MBSJ) உள்ளிட்ட பிற மாநில அமைப்புகளும் பங்கேற்றன.லுவாஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, அலட்சியமாக கழிவு நீரை வெளியேற்றி அருகிலுள்ள நீர்நிலைத் தரத்தை பாதித்ததாக சந்தேகிக்கப் படும் ஒரு கோழி அறுக்கும் நிறுவனத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
“இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நீர்நிலை மீதான தாக்கத்தை மையப்படுத்தியது; குறிப்பாக திரும்பும் நீர் வெளியேற்றம், கழிவுகள் மற்றும் மாசுபடுத்திகளின் நுழைவு அல்லது வெளியேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியது” என்று லுவாஸ் தெரிவித்தது.இதைத் தொடர்ந்து, லுவாஸ் அந்த வளாகத்திற்கு பூஜ்ய வெளியேற்றக் கொள்கை (Zero Discharge Policy - ZDP) இன் கீழ் உரிமம் பெறுவதற்கான அறிவிப்பை வழங்கியது.
மேலும், கால்நடை பராமரிப்பு மற்றும் பதப்படுத்தும் அனைத்து வளாகங்களும் தங்கள் கழிவுநீர் வெளியேற்றத்தில் உஷார் கொண்டிருக்க வேண்டும், ZDP இன் கீழ் உரிமம் பெற வேண்டும், மற்றும் தங்கள் கழிவுகள் நீர்நிலைகளை மாசுபடுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என லுவாஸ் எச்சரித்துள்ளது.
வாட்டர் கோன்சோர்ட்டியம் (IWK), சுற்றுச்சூழல் துறை (DOE), மலேசிய காவல்துறை (PDRM), மற்றும் சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் (MBSJ) உள்ளிட்ட பிற மாநில அமைப்புகளும் பங்கேற்றன.



