2027-க்குள் ஐரோப்பிய தலைமையிலான நேட்டோ பாதுகாப்பு நாடுகள், ஐரோப்பிய பிராந்திய தலைமைத்துவத்தை ஏற்க அமேரிக்க கெடு நிர்ணயித்ததுள்ளது

6 டிசம்பர் 2025, 6:19 AM
2027-க்குள் ஐரோப்பிய தலைமையிலான நேட்டோ பாதுகாப்பு நாடுகள், ஐரோப்பிய பிராந்திய தலைமைத்துவத்தை ஏற்க அமேரிக்க கெடு நிர்ணயித்ததுள்ளது

வாஷிங்டன், டிசம்பர் 5 — அமேரிக்கா, நேட்டோவின் (வட அட்லாந்திக் ஒப்பந்த அமைப்பு) பாரம்பரிய (conventional) பாதுகாப்புத் திறன்களில் பெரும்பான்மையை — உளவுத்துறை முதல் ஏவுகணைகள் வரை — 2027-க்குள் ஐரோப்பா ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறது என்று பென்டகன் அதிகாரிகள் இவ்வாரம் வாஷிங்டனில் தூதுக்குழுக்களிடம் தெரிவித்தனர்.

இந்த இறுக்கமான கெடு சில ஐரோப்பிய அதிகாரிகளுக்கு நடைமுறைக்கு ஒவ்வாததாக தோன்றியது.இந்தச் செய்தி, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐந்து ஆதாரங்கள் (அதில் ஒரு அமெரிக்க அதிகாரியும் அடங்குவர்) உறுதிப்படுத்தப்பட்டது. நேட்டோ கொள்கைக்கு பொறுப்பான பென்டகன் ஊழியர்களும் பல ஐரோப்பிய தூதுக் குழுக்களும் இவ்வாரம்  மேற் கொண்ட  வாஷிங்டனில் சந்திப்பில் இது தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பொறுப்பை அமெரிக்காவிலிருந்து நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்கு மாற்றுவது, போருக்குப் பிந்தய கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினரான வாஷிங்டனின், அதன் மிக முக்கியமான இராணுவ கூட்டாளிகளுடனான செயல்பாட்டை பெருமளவு மாற்றும்.2022-ல் ரஷ்யா உக்ரோனை முழுமையாக ஆக்கிரமித்த பிறகு ஐரோப்பா தனது பாதுகாப்புத் திறனை உயர்த்தியுள்ள முன்னேற்றத்தில் அமெரிக்கா இன்னும் திருப்தி அடையவில்லை என்று பென்டகன் அதிகாரிகள் கூறினர்.

2027 கெடுக்குள் ஐரோப்பா இலக்கை எட்டாவிட்டால், சில நேட்டோ பாதுகாப்பு ஒருங்கிணைப்பு பொறிமுறைகளில் அமெரிக்கா பங்கேற்பதை நிறுத்திவிடலாம் என்று ஆதாரங்கள் தெரிவித்தன. இந்த உரையாடல்களை ரகசியமாக வைத்திருக்க விரும்பியதால் பெயர் குறிப்பிடப் படாதவர்கள் இதைத் தெரிவித்தனர்.

ஐரோப்பாவின் முன்னேற்றத்தை அமெரிக்கா எவ்வாறு அளவிடும் என்பதில் தெளிவில்லை. பாரம்பரிய பாதுகாப்புத் திறன்கள் என்பது அணு ஆயுதங்கள் அல்லாத படைகள், ஆயுதங்கள் முதலியவை ஆகும். இதை எப்படி அளப்பது என்பது விளக்கப்படவில்லை. 2027 கெடு டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடா அல்லது சில பென்டகன் அதிகாரிகளின் தனிப்பட்ட கருத்தா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

ஐரோப்பாவில் அமெரிக்கா இராணுவப் பங்கு குறித்து வாஷிங்டனில் கணிசமான கருத்து வேறுபாடுகள் உள்ளன.பல ஐரோப்பிய அதிகாரிகள், அமெரிக்கா எப்படி அளந்தாலும் 2027 கெடு யதார்த்தமானது அல்ல என்றனர். பணம், அரசியல் விருப்பம் மட்டுமல்லாமல் சில அமெரிக்க தனித்துவமான திறன்களை குறுகிய காலத்தில் மாற்றுவது சாத்தியமில்லை.

உதாரணமாக, இராணுவ உபகரண உற்பத்தியில் பின்னடைவுகள் உள்ளன. அமெரிக்கா ஆயுதங்களை வாங்குமாறு அமெரிக்கா ஊக்குவித்தாலும், மிகவும் விரும்பப்படும் அமெரிக்க ஆயுதங்கள் கூட இன்று ஆர்டர் செய்தால் பல ஆண்டுகள் ஆகும். மேலும் உளவு, கண்காணிப்பு, புலனாய்வு (ISR) போன்ற அமெரிக்கா மட்டுமே வழங்கும் திறன்களை வாங்க முடியாது — இவை உக்ரைன் போரில் முக்கியமாக உதவியவை.

நேட்டோ அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐரோப்பிய நாடுகள் கண்டத்தின் பாதுகாப்புக்கு அதிக பொறுப்பேற்கத் தொடங்கியுள்ளன, ஆனால் 2027 கெடு பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. “பாரம்பரிய பாதுகாப்பு பொறுப்பை அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு மாற்ற வேண்டும் என்பதை நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன” என்றார்.

பென்டகனும் வெள்ளை மாளிகையும் கருத்துக்கு பதிலளிக்கவில்லை.ஐரோப்பிய நாடுகள் பொதுவாக டிரம்பின் “நீங்களே உங்கள் பாதுகாப்புக்கு அதிக பொறுப்பேற்க வேண்டும்” என்ற கோரிக்கையை ஏற்று, பாதுகாப்பு செலவை கணிசமாக உயர்த்த உறுதியளித்துள்ளன.ஐரோப்பிய ஒன்றியம் 2030-க்குள் கண்டத்தை தற்காப்புக்கு தயாராக்க இலக்கை நிர்ணயித்துள்ளது.

வான் பாதுகாப்பு, டிரோன்கள், சைபர் போர், பொருட்கள் போன்ற இடைவெளிகளை நிரப்ப வேண்டும் என்று கூறுகிறது. ஆனாலும் அந்தக் கெடுகூட மிகவும் லட்சியமானது என்று அதிகாரிகளும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து நேட்டோவில் ஐரோப்பியர்கள் அதிகம் பங்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆனால் நேட்டோவில் அமெரிக்கா என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது எப்போதும் தெளிவாக இல்லை.

2024 தேர்தல் பிரசாரத்தில் ஐரோப்பியரை கடுமையாக விமர்சித்த டிரம்ப், பாதுகாப்புக்கு போதுமான செலவு செய்யாத நேட்டோ நாடுகளை ரஷ்யா தாக்க ஊக்குவிப்பேன் என்றார்.ஆனால் ஜூன் மாத நேட்டோ உச்சி மாநாட்டில், வருடாந்த பாதுகாப்பு செலவை GDP-யின் 5% ஆக உயர்த்தும் அமெரிக்க திட்டத்துக்கு ஐரோப்பியர்கள் ஒப்புக்கொண்டதை டிரம்ப் புகழ்ந்தார்.

அதன் பிறகு ரஷ்யாவுக்கு எதிராக கடும் நிலைப்பாடு முதல் உக்ரைன் பிரச்சினையில் மாஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்பது வரை டிரம்ப் மாறி மாறி பேசி வருகிறார். அந்தப் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பியர்கள் பெரும்பாலும் ஒதுக்கப்பட்டதாக புகார் கூறுகின்றனர்.இவ்வார நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் கிறிஸ்டோபர் லேண்டாவ், “ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு நேட்டோ உறுப்பு நாடுகளே பொறுப்பேற்பது தெளிவானது” என்றார்.

“என் வாழ்நாள் முழுவதும் அமெரிக்க நிர்வாகங்கள் இதைப் பலவிதமாகச் சொல்லி வருகின்றன… ஆனால் எங்கள் நிர்வாகம் சொல்வதை முழுமையாக செய்யும்” என்று அவர் X-ல் (முன்னர் டுவிட்டர்) எழுதினார்.   ஐரோப்பிய தலைமையிலான  பாதுகாப்பை ஏற்க வேண்டும் என கெடு நிர்ணயித்தது  அமெரிக்கா 2027-க்குள் ஐரோப்பிய தலைமையிலான நேட்டோ பாதுகாப்பை ஏற்க வேண்டும் என கெடு நிர்ணயித்தது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.