ஷா ஆலம், டிசம்பர் 5: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா பகுதிகள் முழுவதும் இன்று மாலை 8 மணிவரை கனமழை மற்றும் மின்னல் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வானிலை பெர்லிஸ், கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், மலக்கா, ஜோகூர், சரவாக், சபா மற்றும் லாபுவான் பகுதிகளிலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மலேசியா வானிலை ஆய்வு நிறுவனம் மெட் மலேசியா தெரிவித்துள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் மேல் கனமழை நிலவும்போது, அதனால் ஏற்படும் மின்னல், காற்று அலுத்தம் அதிர்வுகளின் அடிப்படையில் எச்சரிக்கை வெளியிடப்படுகிறது. இந்த எச்சரிக்கை ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும், இது ஒரு முறை வெளியிடப்படும் அதிகபட்சம் ஆறு மணிநேரம் வரை செல்லுபடியாகும்
பொதுமக்கள் மெட் மலேசியா அதிகாரப்பூர்வ இணையதளம் www.met.gov.my, சமூக ஊடகங்கள் மற்றும் myCuaca செயலியை பின்பற்றி, சரியான மற்றும் தற்போதைய வானிலை தகவல்களை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


