‘Program Ceria ke Sekolah TNB’ திட்டத்தின் மூலம் கோம்பாக் நாடாளுமன்றமும் சுங்கை துவா தொகுதியும் RM20,000 நன்கொடை பெற்றன

5 டிசம்பர் 2025, 9:03 AM
‘Program Ceria ke Sekolah TNB’  திட்டத்தின் மூலம் கோம்பாக் நாடாளுமன்றமும் சுங்கை துவா தொகுதியும் RM20,000 நன்கொடை பெற்றன

ஷா ஆலம், டிச 5 — கோம்பாக் நாடாளுமன்றமும் சுங்கை துவா தொகுதியும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) சிலாங்கூர் நடத்திய ‘Ceria ke Sekolah’ திட்டத்தின் மூலம் RM20,000 நன்கொடையை பெற்றுள்ளன.

இந்த நன்கொடை அந்நிறுவனத்தின் சமூக பொறுப்பு (CSR) திட்டத்தின் ஒரு பகுதியாகும் என மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“இந்த நன்கொடைக்காக தெனாகா நேஷனல் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். RM10,000 சுங்கை துவாவுக்காகவும் RM10,000 கோம்பாக் தொகுதிக்காகவும் வழங்கப்பட்டது. RM100 மதிப்புள்ள வவுசர்கள் மூலம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

“இது வெறும் லாபத்தைத் தேடுவதற்காக அல்ல. சமூகத்துடனும், அவர்கள் வாடிக்கையாளர்களுடனும், நல்லுறவை மேம்படுத்தும் தெனாகா நேஷனல் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சியாகும்,” என்று அவர் தெரிவித்தார்.

மாநிலச் செயலகக் கட்டிடத்தில் நடைபெற்ற ``TNB Ceria ke Sekolah`` நிகழ்ச்சிக்குப் பிறகு மீடியா சிலாங்கூரிடம் அவர் இவ்வாறு கூறினார்.

இந்த நன்கொடை புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களின் பள்ளி ஏற்பாடுகளை செய்ய பெற்றோர்களின் பணச் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என அமிருடின் நம்புகிறார்.

“பள்ளிகள் திறக்கும் முன்பாக இதை நாங்கள் வழங்குவோம். இது ஒரு அளவுக்கு உதவியாக இருந்து அவர்களின் சுமையை இலகுவாக்கும் என நம்புகிறோம்,” என்று அமிருடின் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.