கோலாலம்பூர், டிச 5- இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை சமூக ஊடகங்களில் இருந்த இனவாதத்தை முன்னிலைப்படுத்தும் அம்சங்கள் நீக்கக் கோரி சுமார் 1583 விண்ணப்பங்களை மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்திடம் முன்வைக்கப்பட்டதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
588ஆவது சட்டத்தின் கீழ் மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமைச்சர் விவரித்தார்.
இதனால் வழங்கப்படும் தகவல்கள் அல்லது செய்திகள் யாவும் பொறுப்புணர்வுடன் இருப்பதையும் நாட்டின் சட்டத் திட்டங்களைப் பின்பற்றுவதையும் உறுதி செய்வதாய் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தவறான தகவல்கள் அல்லது நாட்டின் சட்டத்திற்கு எதிராக உள்ள அனைத்து செய்திகள் கொண்ட உள்ளடக்கங்கள் இருந்தால் பொதுமக்கள் தாராளமாக https://aduan.mcmc.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக தெரியப்படுத்தலாம்.


