வாஷிங்டன், 5 டிசம்பர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் அகதிகள், அரசியல் தஞ்சம் தேடுவோர் மற்றும் பிற குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் வேலை அனுமதி காலத்தை ஐந்து ஆண்டிலிருந்து 18 மாதமாக குறைக்கும் வகையில் குடியேறும் கொள்கையை கடுமையாக்கவுள்ளதாக ஜெர்மன் பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம் வெளிநாட்டு குடியேறுபவர்களை அடிக்கடி பரிசோதிக்க அனுமதிக்கும் எனக் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத்துறை (USCIS) தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் நூற்றுக்கணக்கான மக்களைப் பாதிக்கிறது. மேலும் வேலை அனுமதி பெற்று பணிபுரியும் தஞ்சம் தேடுவோரின் உழைப்பை நம்பியுள்ள நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.
அமெரிக்க உள்துறை பாதுகாப்பு துறையின் தகவல் படி, டிரம்ப் ஜனவரியில் பதவியேற்றதிலிருந்து இன்று வரை, சுமார் இரண்டு மில்லியன் பேர் அமெரிக்காவை விட்டுச் சென்றுள்ளார்கள். இதில் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் நாடுகடத்தப்பட்டவர்கள்; மேலும் 16 லட்சம் பேர் தானாகவே நாடு திரும்பிச் சென்றவர்கள் எனக் கூறப்படுகிறது.


