துங்கு லக்சாமானா ஜோகூர் புற்றுநோய் மையம்; மாநிலத்தின் மருத்துவ சூழலை வலுப்படுத்தும்

5 டிசம்பர் 2025, 7:52 AM
துங்கு லக்சாமானா ஜோகூர் புற்றுநோய் மையம்; மாநிலத்தின் மருத்துவ சூழலை வலுப்படுத்தும்
துங்கு லக்சாமானா ஜோகூர் புற்றுநோய் மையம்; மாநிலத்தின் மருத்துவ சூழலை வலுப்படுத்தும்

ஜொகூர் பாரு, டிச 5- ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஜொகூர் துங்கு லக்‌சாமானா புற்றுநோய் மையத்தின் செயல்பாடானது, குறிப்பாக புற்றுநோயியல் துறையில் மாநிலத்தின் மருத்துவ சூழலை வலுப்படுத்தும் என்று ஜொகூர் மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.

200 படுக்கைகள் கொள்ளளவு கொண்ட, 500 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இம்மையம், PET-CT மற்றும் அணு மருத்துவ வசதிகளுடன் அமையப்பெற்றுள்ளது.

இதில் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே நிறுவப்பட்ட முதல் சைக்ளோட்ரான் (Cyclotron) வசதியும் அடங்கும். இந்த சைக்ளோட்ரான், புற்றுநோய் இமேஜிங் மற்றும் சிகிச்சைக்கான மருத்துவ ரேடியோ ஐசோடோப்புகளை (radioisotop) உற்பத்தி செய்ய உதவுகிறது.

"ஜோகூர் மருத்துவச் சுற்றுலாவுக்குப் பெயர் பெற்றது. எனவே, இந்த புற்றுநோய் மையத்தின் மூலம், ஸ்கிரீனிங் அல்லது சிகிச்சைக்காக ஜொகூருக்கு வருபவர்களை ஈர்க்கும் ஒரு தயாரிப்பாக அல்லது ஒரு கவர்ச்சியாக இதை நாம் பயன்படுத்தலாம்," என்று லிங் தியான் சூன் கூறினார்.

இம்மையத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார்  அவர்களால் இங்குள்ள ஒரு நிகழ்வில் நிறைவேற்றப்பட்டது.

2015 ஆம் ஆண்டில் கல்லீரல் புற்றுநோய் காரணமாக காலமான துங்கு லக்சாமானா ஜொகூர், அல் மர்ஹும் துங்கு அப்துல் ஜலீல் அவர்களின் மறைவின் 10-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் இந்தத் தொடக்க விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.