இந்தியா ஸ்மார்ட்போன்களில் சைபர் செக்யூரிட்டி ஆப் முன்பதிவு செய்யும் உத்தரவை ரத்து செய்தது:

4 டிசம்பர் 2025, 9:53 AM
இந்தியா ஸ்மார்ட்போன்களில் சைபர் செக்யூரிட்டி ஆப் முன்பதிவு செய்யும் உத்தரவை ரத்து செய்தது:

புது டில்லி, டிச. 3 — உளவு பார்க்கும் அச்சம் காரணமாக அரசியல்வாதிகள், தனியுரிமை ஆதரவாளர்கள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, இந்திய அரசு இன்று புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களில் இந்தியவின் சைபர் பாதுகாப்பு செயலியை முன்கூட்டியே நிறுவும்  அதன் உத்தரவை ரத்து செய்தது.

நவம்பர் 28 அன்று ஆப்பிள், சாம்சங், ஷியோமி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட உத்தரவில், நீக்க முடியாத “சஞ்சார் சாத்தி” என்ற மென்பொருளை 90 நாட்களுக்குள் புதிய போன்களில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியின் அரசு கேட்டுக் கொண்டிருந்தது.

இதனை திங்கட்கிழமை ராய்ட்டர்ஸ் முதலில் செய்தியாக வெளியிட்டது.“மொபைல் உற்பத்தியாளர்களுக்கு இந்த முன்நிறுவலை கட்டாயமாக்குவதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது” என்று இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் போராட்டங்கள், பத்திரிகைத் தலையங்கங்கள், தனியுரிமை ஆதரவாளர்-களின் கண்டனம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த முடிவு வந்துள்ளது. ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இந்த உத்தரவுக்கு இணங்க மறுத்து விட திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மட்டுமே அமைச்சர்கள் இந்தத் திட்டத்தை வெளிப்படையாக ஆதரித்து, “திருடப்பட்ட போன் களைக் கண்டறிந்து தடுப்பதற்கும், அவை தவறாக பயன்படுத்தப் படாமல் தடுப்பதற்கும் மட்டுமே இந்த ஆப் உதவும்” என்று விளக்கம் அளித்திருந்தனர்.

மேலும் ஆப்பை முடக்க முடியாத படி செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான விமர்சனங்களையும் மறுத்திருந்தனர்.கடந்த ஆண்டு அமெரிக்க அதிகாரிகளின் நெருக்கடிக்குப் பிறகு லேப் டாப் இறக்குமதிக்கான உரிமம் கட்டாயம் என்ற கொள்கையைத் திரும்பப் பெற்றது போலவே இதுவும் ஒரு பின்வாங்கல் ஆகும்.

“இந்தியாவின் மிகவும் எதிர்பாராத ஒழுங்குமுறை சட்டம், நம்பகத்தன்மையை மதிக்கும் வணிகங்களுக்கு தொடர்ந்து சவாலாக உள்ளது” என்று இணைய வாதிடும் தொழில்நுட்ப வழக்கறிஞர் மிஷி சவுதரி கூறினார்.

“இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், மோசடிகளைத் தடுப்பதற்கு என்ன உண்மையில் செயல்படுகிறது என்பதை ஆராயாமல் தன்னிச்சையான கொள்கை முடிவுகள் எடுப்பது கவலையளிக்கிறது.

”அரசியல் போராட்டங்கள், தனியுரிமை கவலைகள் இந்த ஆப் கட்டாயம் இல்லாமல் பிரபலமடைந்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. நேற்று முதல் 6 லட்சம் பேர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

“இந்த ஆப் பாதுகாப்பானது, சைபர் உலகில் உள்ள கெட்டவர்களிடமிருந்து குடிமக்களைப் பாதுகாக்கவே உருவாக்கப்பட்டது” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நாடாளுமன்றத்தில் அளித்த அறிவிப்பு, “நீக்க முடியாத ஆப்பை கட்டாயம் ஆக்குவதற்கான சட்ட அதிகாரத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்றும், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரினார்.

“கட்டாயமாக நிறுவப்பட்ட இதுபோன்ற ஆப்பில் பின்கதவு (backdoor) இருக்கலாம் என்ற கடுமையான, உண்மையான அச்சமும் உள்ளது. அது பயனரின் தரவு மற்றும் தனியுரிமையை முற்றிலும் சமரசம் செய்துவிடும்” என்றும் அவர் கூறினார்.தொழில்துறை வட்டாரங்கள் படி, மோடியின் இந்தத் திட்டத்திற்கு உலகளவில் முந்தைய உதாரணம் மிகக் குறைவே.

ரஷ்யா மட்டும்தான் ஒரே அறியப்பட்ட உதாரணமாக இருக்கலாம். ஆகஸ்ட் மாதம் மாஸ்கோ, வாட்ஸ் ஆப் போட்டியாக உருவாக்கப்பட்ட MAX என்ற அரசு ஆதரவு மெசஞ்சர் ஆப்பை அனைத்து மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்களிலும் முன்பதிவு செய்ய உத்தரவிட்டது.

அதனை விமர்சகர்கள் பயனர்களை உளவு பார்க்கப் பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர். தனியுரிமை தொடர்பான விமர்சனங்களை மோடி இதற்கு முன்னரும் எதிர் கொண்டுள்ளார். 2020-ல் அலுவலக ஊழியர்களுக்கு கோவிட்-19 தொடர்பான கண்டறியும் ஆப்பை கட்டாயமாக்கிய போது கடும் விமர்சனம் எழுந்தது.

பின்னர் தனியுரிமை ஆதரவாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அது “கேளுங்கள்” என்ற நிலைக்கு மாற்றப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.