நேப்பால் டிச 4 - இமயமலையில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இமயமலையின் மையப்பகுதியில் சுமார் 800 கிலோ மீட்டர் நீளமான பகுதியை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் கடந்த 500-700 ஆண்டுகளாகச் சேர்ந்து கொண்டிருக்கும் நிலத்தட்டு அழுத்தம் ஒரே நேரத்தில் வெளியானால், 8.8 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய 2 நிலநடுக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக பீதியை கிளப்பியுள்ளனர்.
அப்பகுதியில் பல நூற்றாண்டுகளாகப் பெரிய நிலநடுக்கம் எதுவும் ஏற்படாமல் உள்ளது. மேலும், நிலநடுக்கம் எப்போது வரும் என்பதை விஞ்ஞானிகளால் துல்லியமாக கணிக்க முடியாத போதிலும், ஆபத்து மிக தீவிரமானது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால், இமய மலைக்கு அருகில் உள்ள நாடுகள் பேரிடர்களை எதிர்கொள்ளும் தயார் நிலைகளை வலுப்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.


