பெட்டாலிங் ஜெயா, டிச 4- கழிவறைக்குள் பெண்ணைப் படமெடுத்த வேலையில்லா ஆடவருக்கு எதிராக இங்குள்ள கோல திரங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்காயிரம் ரிங்கிட் அபராதத்தை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த மாதம் ஒரு வணிக வளாகத்தின் கழிவறையில் ஒரு பெண்ணை தனது கைபேசியைப் பயன்படுத்தி காணொளி எடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு வேலை இல்லா இளைஞனுக்கு RM4,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் இஃபா நபிஹா முகமட் இஷாக், குற்றம் சாட்டப்பட்ட முஹம்மது சியாமி மாட் ரோஸ் (24) என்பவருக்கு எதிராக இந்தத் தீர்ப்பை வழங்கினார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
குற்றப்பத்திரிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி மாலை 6.12 மணியளவில், ஒரு வணிக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள பெண்களுக்கான கழிவறையில் பாதிக்கப்பட்ட பெண் இருந்தபோது, அவரது அந்தரங்கங்களை படமெடுத்து மானபங்கப்படுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் மீதான இந்தச் செயல், மலேசிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 509-இன் கீழ் (ஒரு பெண்ணின் மானத்தை அவமதிக்கும் நோக்குடன் செயல்படுதல்) குற்றம் சாட்டப்பட்டது. தேசிய சட்ட உதவி அறக்கட்டளையின் (YBGK) வழக்கறிஞர் நூருல் ஹுஸ்னா ஜூக்கெபிலி, குற்றம் சாட்டப்பட்டவருக்காக ஆஜரானார்.


