லண்டன், டிச 4- இங்கிலாந்து பிரீமியர் லீக் காற்பந்துப் போட்டியில் புதன்கிழமை இரவு அன்ஃபீல்டில் நடந்த ஆட்டத்தில் லிவர்புல் அணி சண்டர்லென் அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.
ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் விர்ஜில் வான் டைக்கின் தவறால் சண்டர்லேண்ட் வீரர் செம்ஸ்டைன் தல்பி அடித்த பந்து வான் டைக்கின் காலில் பட்டுத் திரும்பி கோலானது.
இதன் மூலம் சண்டர்லேண்ட் 1-0 என முன்னிலை பெற்றது. சண்டர்லேண்ட் 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு அன்ஃபீல்டில் வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது, ஆட்டத்தின் கடைசி நேரத்தில் லிவர்பூல் வீரர் ஃப்ளோரியன் விர்ட்ஸ் அடித்த ஷாட் சண்டர்லேண்டின் நார்டி முக்கிலேயின் மீது பட்டுத் திரும்பி கோல் வலைக்குள் சென்றதால், லிவர்பூலுக்குச் சமன் கிடைத்தது.
லிவர்புல் நிர்வாகி அர்னே ஸ்லாட் தலைமையிலான லிவர்பூல் அணி தற்போது 22 புள்ளிகளுடன் அட்டவணையில் 8வது இடத்தில் உள்ளது. சண்டர்லேண்ட் அணி 23 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.


