ஆயர் சிலாங்கூர் இணைய அமைப்பில் பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

4 டிசம்பர் 2025, 5:05 AM
ஆயர் சிலாங்கூர் இணைய அமைப்பில் பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

ஷா ஆலம், டிச 4: ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அதன் வாடிக்கையாளர் தகவல் அமைப்பில் திட்டமிடப்பட்ட மேம்பாட்டு பராமரிப்பை, டிசம்பர் 6 அன்று மாலை 6 மணி முதல் டிசம்பர் 7 அன்று காலை 3 மணி வரை மேற்கொள்ளும்.

அந்நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், Air Selangor App 2.0 மற்றும் ஆயர் சிலாங்கூர் வாடிக்கையாளர் சேவை வலைத்தளம் போன்ற பல தளங்களில் குறிப்பிட்ட காலத்தில் தற்காலிக தாமதங்கள் ஏற்படக்கூடும் என தெரிவித்தது.

“இந்த பராமரிப்பு பணிகள், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவை மற்றும் அனுபவத்தை வழங்குவதற்கான ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்,” என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு, www.airselangor.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

notice-itd-6-december-en.jpg

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.