உலு லங்காட், டிச 4- சிலாங்கூர் மாநிலத்தில் இன்று அதிகாலை தொடங்கி பெய்து வரும் கனமழையின் காரணமாக உலு லங்காட் மாவட்டத்தின் சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டது.
பத்து 20, கம்போங் நன்டிங், டுசுன் துவா, பத்து 18 சுங்கை லுய் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
வெள்ள அபாய ஒலியும் ஒலிக்க செய்துவிட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
வெள்ளப்பேரிடர் காரணமாக பொதுமக்கள் அண்மைய நிலவரங்களைத் தெரிந்து வைத்து கொள்வதுடன் அமலாக்க துறைக அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


