கோலாலம்பூர், டிச 3 - இன்று, மூன்று அமைச்சர்கள் செனட்டராக இரண்டாம் தவணைக்கான பதவி உறுதிமொழியை மேலவைத் தலைவர் டத்தோ அவாங் பீமீ அவாங் அலி பாசா முன்னிலையில் எடுத்துக்கொண்டனர்.
அம்மூவர் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் மற்றும் மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ முஹமட் நயிம் மொக்தார் ஆகியோர் ஆவர்.
மேலும், தேசிய கொள்கை மற்றும் வளர்ச்சிக்குப் பங்களிப்பதில் அவர்களின் நிபுணத்துவம் மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மீது உள்ள நம்பிக்கையை அம்மூன்று அமைச்சர்களின் மறு நியமனம் பிரதிபலிப்பதாக அவாங் பீமீ தெரிவித்தார்.
இவர்கள் மூவரும் தங்கள் முதல் தவணைக்கான உறுதிமொழியை 2022 டிசம்பரில் எடுத்தனர்.


