ஷா ஆலம், டிச 3- சிலாங்கூர் அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் நாட்டில் பலராலும் அறியப்படும் ஜெயபக்தி பதிப்பகம் அதன் முகப்பினை முதன்முறையாக SIBF கண்காட்சியில் அமைத்துள்ளது.
இதன் அடிப்படையில் ஜெயபக்தி பதிப்பகம் ஒரு முகப்பினை அங்கு அமைத்துள்ளது. ஜெயபக்தி பதிப்பகத்தின் தயாரிப்பில் வெளியான பள்ளி புத்தகங்கள், இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட தன்முனைப்பு புத்தகங்கள், நாவல்கள் ஆகிய புத்தகங்கள் இங்கு கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளதாக ஜெயபக்தி பதிப்பகத்தின் முகப்பு பணியாளர் கூறினார்.
மேலும், மழலையர் பள்ளிகளுக்கான புத்தகங்கள், ஜெயபக்தியின் புதிய வெளியீடான திருக்குறள் புத்தகங்களும் இங்கு விற்பனைக்கு உள்ளதாக மீடியா சிலாங்கூர் தமிழ்ப்பிரிவு மேற்கொண்ட களநிலவரத்தில் தெரிய வந்தது.
தமிழ் வாசகர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என யாவரும் இங்கு வந்து புத்தகங்களை வாங்கி செல்லலாம். சிலாங்கூர் அனைத்துலக புத்தகக் கண்காட்சி நவம்பர் 28 முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை செத்திய சிட்டி மாநாட்டு மைத்தில் நடைபெறுகிறது.




