கோலாலம்பூர், டிச 3 - கே.எல்.ஐ.ஏ. டெர்மினல் 1இலிருந்து புறப்பட இருந்த விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அது பொய்யானது என்று உறுதிப்படுத்தப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் கிடைத்தவுடன் அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நீக்கும் குழுவுடன் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அதில் அத்தகவல் பொய் என தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் ஆடவர் ஒருவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று பொய்யான வெடிகுண்டு மிரட்டல் அல்லது அச்சுறுத்தல்களைப் பரப்புவது கடுமையான குற்றங்களில் ஒன்று என்று விமான நிலைய நிர்வாகம் எச்சரித்துள்ளது.


