ஷா ஆலம், டிசம்பர் 3 — சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி உட்பட பல சிலாங்கூர் அரச மன்ற உறுப்பினர்கள் நேற்று கிள்ளானில் உள்ள இஸ்தானா ஆலம் ஷா அரச மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ் முன்னிலையில் மீண்டும் நியமனப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அதே வேளையில் பதவியின் படி உறுப்பினர்களாக தெங்கு லக்ஸமானா சிலாங்கூர் தெங்கு சுலைமான் ஷா அல்ஹாஜ் மற்றும் சிலாங்கூர் இஸ்லாமிய மத மன்றத் தலைவர் டத்தோ சாலிஹுடின் சைடின் ஆகியோரும் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
வாரிஸ், ஓராங்-ஓராங் பெசார், ஓராங்-ஓராங் துவா பிரிவுகளைச் சேர்ந்த ஏற்கனவே உள்ள உறுப்பினர்களும் மீண்டும் நியமனக் கடிதங்களைப் பெற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
சிலாங்கூர் மேலும் ஓராங்-ஓராங் பெசார் பிரிவில் புதிதாக நியமிக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் மாநிலச் செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம், டா ருல் எஹ்சான் இஸ்லாமிய அறக்கட்டளைத் தலைவரும் முன்னாள் துணை காவல் துறை தலைவருமான தான் ஸ்ரீ மஸ்லான் மான்சோர் ஆகியோருக்கும், ஓராங் துவா-துவா பிரிவில் உங்கு ஸ்ரீ படுகா ராஜா ராஜா டத்தோ ரேசா அல்ஹாஜ் ராஜா ஸைப் அல்ஹாஜ் அவர்களுக்கும் சுல்தான் நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இதற்கிடையில் முதலமைச்சர் அமிருடின் மீண்டும் ஒரு பதவிக் காலத்திற்கு அரச மன்றத்தில் பணியாற்ற அளிக்கப்பட்ட நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார்.
மாநில சட்டங்களுக்கு ஏற்ப தனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் இந்த மன்றம் அல்லாஹ்வின் அருளாலும் வழிகாட்டுதலாலும் தொடர்ந்து ஆசிர்வதிக்கப் படவும் வேண்டும் என்று அவர் X தளத்தில் பதிவிட்டார்.



