ஷா ஆலம், டிச 3: நேற்று நண்பகல் கிள்ளான், ஜாலான் மேரு 6வது மைலில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வீடுகள், ஒரு பழைய வாகனப் பட்டறை மற்றும் மூன்று வாகனங்கள் முழுமையாக அழிந்தன.
இச்சம்பவம் தொடர்பாக மதியம் 1.39 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் அடுத்து காப்பார் தீயணைப்பு நிலையத்திலிருந்து குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் மலேசியா தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் (JBPM) தீ அணைப்பு பிரிவு உதவி இயக்குநர் அக்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
“தீ விபத்து நான்கு வீடுகளையும், ஒரு பழைய வாகனப் பட்டறையையும் பாதித்தது. சேதம் சுமார் 90 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை,” என்று அவர் கூறினார்.
இந்த தீயணைப்பு நடவடிக்கையில் வட கிள்ளான் மற்றும் புக்கிட் ஜெலுதோங் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களும் ஈடுப்பட்டனர். மொத்தம் 15 தீயணைப்புப் பணியாளர்கள் ஈடுபட்டு, தீ முழுமையாக 2.13 மணிக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.


